தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கைக்கான நோர்வே தூதுவர் யாழ் பயணம்

இலங்கைக்கான நோர்வே தூதுவர் உள்ளிட்ட குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை 16/09/2014 யாழிற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சிக்கு நேற்று திங்கட்கிழமை விஐயம் செய்த நோர்வே தூதுவர், யு.என்.டி.பி. நிறுவனத்தினால் நோர்வே அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டதுடன் அதன் முன்னேற்றங்கள் பற்றியும் கலந்துரையாடினார்.Nor3

பின்னர் முழங்காவில் பிரதேசத்தில் நோர்வே அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் பால் சேகரிப்பு நிலையம், கண்டாவளை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வெல்ல உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

இன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனை சந்தித்துப் பேசிய பின்னர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...