Designed by Iniyas LTD
இலங்கைப் பிரதமர் ரணில் சிங்கப்பூர் பிரதமருடன் சந்திப்பு
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் லீ சியன்லோங்கை சந்தித்துள்ளார். நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் காரியாலம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த நாட்டின் துணைப் பிரதமர் மற்றும் பொருளாதார மற்றும் சமூக கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் சன்முகரத்தனம் ஆகியோரையும் சந்தித்துள்ளார்.
இது தவிர பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டின் உள்நாட்டலுவல்கள் மற்றும் சட்ட அமைச்சர் கே சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஈஸ்வரன் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரையும் சந்தித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.