தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையின் பாதுகாப்பு நடைமுறைகளை நாம் மீறவில்லை – அமெரிக்கா

நாம் இலங்கையின் பாதுகாப்பு நடைமுறைகளை மதிக்கிறோம், அதனை மீறவில்லை என இலங்கையில் உள்ள அமெரிக்கா தூதரகவட்டாரங்கள் நேற்று (05) தெரிவித்துள்ளன. அமெரிக்க படையினர் தமது பைகளை பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தாது கில்ட்டன் ஆடம்பர விடுதியில் இருந்து அமெரிக்கத் தூதரகத்திற்கு கொண்டு சென்றுள்ளது குறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சா எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதில் வழக்கும் வகையிலேயே அமெரிக்கா இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளும், ஏனைய அமெரிக்க பயணிகளும் இலங்கை அரசின் பாதுகாப்பு நடைமுறைகளை மதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாம் வியன்னா சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடந்துகொள்கிறோம். எமது படையினருக்கும் இலங்கை படையினருக்கும் நல்ல ஒத்துழைப்புக்கள் உள்ளன என அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.


Comments
Loading...