Designed by Iniyas LTD
பயங்கரவாதியின் உடற்பாகங்களை மட்டக்களப்பில் புதைக்க அனுமதி இல்லை
தற்கொலை குண்டுதாரி மொஹமட் ஆஷாத்தின் உடற்பாகங்களை மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் புதைக்க அனுமதிக்க முடியாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தலைமையில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு – கள்ளியங்காடு மயானத்தில் பயங்கரவாதியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டமை குறித்த விவாதம் இதன்போது நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதியின் உடற்பாகங்களை மாநகர எல்லைக்குள் புதைக்க முடியாது என்ற பிரேரணை இதன்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணைகளுக்கு ஆதரவாக 15 பேரும் எதிராக 8 பேரும் வாக்களித்ததுடன், 14 பேர் நடுநிலை வகித்ததுடன், அமர்வில் ஒரு உறுப்பினர் கலந்துகொள்ளவில்லை.