தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையின் வடபகுதியில் ஜிகாத் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது – இந்தியா

இலங்கையின்வடபகுதியில்ஜிகாத்தீவிரவாதிகளின்செயற்பாடுகள்அதிகரிப்பதையும்,அவர்களுக்குபாக்கிஸ்தானுடன்உள்ளதொடர்பால்ஏற்படக்கூடியவிளைவுகளையும்  இலங்கைஅரசாங்கம்கருத்தில்கொள்ளவேண்டும்எனஇந்தியஉள்துறைஅமைச்சகஅதிகாரியொருவர்தெரிவித்துள்ளார்இதுகுறித்துஇந்தியஊடகமொன்றுதெரிவித்துள்ளதாவதுIndian Flag

தென்னிந்தியாவில்   குண்டு தாக்குதல்களுக்கு திட்டமிட்ட  பாக்கிஸ்தானின் இலங்கை தூதரக அதிகாரி சித்தீக் குறித்த இந்தியாவின் விசாரணைகள் முட்டுக்கட்டை நிலையிலுள்ளன. குறிப்பிட்ட அதிகாரி குறித்த விபரங்களை சேகரிப்பதற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்காக இந்தியதேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் கோரிய அனுமதிக்கு இன்னமும் இலங்கை பதிலளிக்கவில்லை.

முன்னைய ராஜபக்ச அரசாங்கம் அதற்கு இணங்கவேயில்லை,புதிய அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கின்றோம் என தேசிய புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வடபகுதியில் ஜிகாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதையும், அவர்களுக்கும் பாக்கிஸ்தானிற்கும் தொடர்புள்ளதையும் இலங்கை கருத்திலெடுக்கவேண்டும், என உள்துறை அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.இந்த விடயத்தினால் இலங்கை தனக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் கொழும்பு இந்தவிடயத்தில் என்ன உதவிகளை செய்யலாம் என்பது தெளிவில்லாமலுள்ளது. மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட  முகமட் சுலைமானை விசாரிப்பதற்காக இலங்கை செல்வதற்கும் இந்திய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

அவரை இந்தியாவிடம் ஓப்படைக்குமாறு புதுடில்லி விடுத்த வேண்டுகோள்களுக்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை.இந்த விடயத்தில் உறுதியளித்தபடி நடந்துகொள்வது இலங்கையை பொறுத்த விடயம்,எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Loading...