Designed by Iniyas LTD
வெறும் வார்த்தைகளால் மட்டும் நாட்டை காப்பாற்ற முடியாது – குஷ்பு
பிரதமர் எப்போதும் பொய் வாக்குறுதிகளை அளிப்பதை தவிர வேறு எதையும் செய்யவில்லை என நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்திதொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, பிரதமர் மோடி மாதம் தோறும் மன்கீபாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் பேசுகிறார்.
வானொலியில் பேசினால் மட்டும் போதுமா வெறும் வார்த்தைகளால் மட்டும் நாட்டை காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து பிரதமர் அதனை செயலிலும் காட்ட வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், ஸ்மிருதி இரானி கோவாவில் கடை ஒன்றின் உடை மாற்றும் அறையில் கமெரா வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து குஷ்பு கூறுகையில், இதனை நீண்ட நாட்களுக்கு முன்னரே நான் சொன்னேன் என்றும் உடைகளை எப்போதும் கடைகளில் அணிந்து பார்க்க வேண்டாம் என கூறியிருந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.