Designed by Iniyas LTD
இலங்கையில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க தூதரகம் ….
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுவிகப்பட்டுள்ளது.
இந்த அறிவில்லை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பிரதமரை பதவி நீக்கம் செய்து, நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளதன் விளைவாக, அரசியல் கொந்தளிப்பு, உள்நாட்டு அமைதியின்மை, எதிர்ப்புப் பேரணிகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் பிரதமரின் வதிவிடமான அலரி மாளிகைக்கு அருகே இன்று, பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
அமைதியான நோக்கில் தொடங்கும் ஆர்ப்பாட்டங்கள் கூட, மோதலாக மாறவோ, வன்முறைகள் அதிகரிக்கவோ கூடும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த இடங்களில் இருந்து விலகி, இருக்குமாறும் இலங்கையில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது..
மேலும் கூட்டங்கள் கூடும் இடங்களை தவிர்த்து உள்ளூர் ஊடகங்களை கவனித்து, உங்களைச் சுற்றி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.