தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவேன் – மகிந்த அறிவிப்பு…

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமர் இந்த தகவலை வெளியிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

120 என்ற பெரும்பான்மை தன்னிடம் உள்ளதாகவும், சிக்கல் இல்லாத அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும் எனவும் வாக்குறுதியை ஜனாதிபதி வழங்கியிருந்ததாகவும்,

அதன் காரணமாகவே தான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்  இதுவரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினது ஆதரவை கூட ஜனாதிபதியால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும்  குறித்த ஊடகம்  தெரிவித்துள்ளது.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் பசில் ராஜபக்ச தரப்பு நேற்றைய தினம் அமைச்சு பதவி பெற்றுக் கெள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும்,

அதேபோல் துமிந்த திஸாநாயக்க உட்பட சிலர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இலங்கையின்  புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமையை, எந்தவொரு நாடும் இன்னமும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது சுட்டிகாட்டத்தக்கது.

அத்துடன் ஜனாதிபதியின் ஜனநாயகமற்ற செயல் குறித்து சர்வதேச நாடுகளில் விமர்சனம் செய்துள்ளன.

மேலும்  இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சர்வதேச நாடுகள் பல தங்கள் பிரஜைகளுக்கு அறிவிப்பு விடுத்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...