தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை கண்டறிவதற்கான ஆய்வு ….

வடக்கு- கிழக்கிற்கு அப்பாலுள்ள கடல் பகுதியிலுள்ள இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை கண்டறிவதற்கான ஆய்வுகள் நேற்றையதினம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்கவலை இலங்கையின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உலகளவில் பிரபலமான Schulumberger என்ற நிறுவனமே இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்புத் துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்த ஆய்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு  இடம்பெற்றுள்ளது.

இந்த ஆய்வுக்காகப் பனாமா நாட்டுக் கொடியுடன் BGP-Pioneer என்ற கப்பல் கொழும்பு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  கப்பல் வடக்கு, கிழக்கிற்கு அப்பாலுள்ள கடல் பகுதியில் 45 நாட்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு தரவுகளை சேகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேகரிகப்பட்ட தரவுகள்  மலேசியாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவு கூறப்படுகின்றது.

இதேவேளை கிழக்குப் பகுதியிலுள்ள ஜேஎஸ்-5, ஜேஎஸ்- 6 துண்டங்களில் முதலில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வானது  பின்னர், காவேரி மற்றும் மன்னார் படுக்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...