Designed by Iniyas LTD
இலங்கையில் கணனி பயன்படுத்துவோரிற்கு அவசர எச்சரிக்கை…
இலங்கையில் பயன்பாட்டிலுள்ள கணனிகளை புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.
விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக இந்த வரஸ் பரவி வருவதாக தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல கூறியுள்ளார்.
விண்டோஸ் 7/ 8.1 மற்றும் 10 ஆகிய இயங்கு தள அமைப்புகளுக்கு இதன் ஊடாக பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரம்பா என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ், இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஊடாக பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக கணனியில் சேமித்து வைக்கப்படும் அத்தியவசியமான தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..
மேலும் விண்டோஸ் இயங்கு தள அமைப்புக்களை புதுப்பித்திருந்தால் இந்த வைரஸ்ஸால் பாதிப்பு ஏற்படாது எனவும் கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
