Designed by Iniyas LTD
உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி…
முல்லைத்தீவு – உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தில் 2019ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 29.01.2019 நேற்றையநாள் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டார்.
உடுப்புக்குளம் தமிழ்வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்வுகளை, வித்தியாலய முதல்வர் திரு.சி.சத்தியசிலன் தலைமையேற்று நடாத்தினார்.
விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வானது, தொடர்ந்து மக்கல விளக்கேற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றல், மாணவர்களது அணி நடை என்பவற்றினையடுத்து இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் இடம்பெற்றதுடன்,
மேலும் இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராச – ரவிகரன் அவர்கள், திரு.போ.கு.கேரஸ் டிலான் (ஆசிரிய ஆலோசகர் உடற்கல்வி), செல்வி.மரியநாயகம் சுசீலா (பாடசாலையின் பழைய மாணவி), திரு.அ.றொபின்சன் (ஆசிரிய ஆலோசகர்), திருமதி.சித்திரவேல் சாந்தகுமாரி (உப தபாலதிபர் அளம்பில்), கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந் நிகழ்வில் பாடசாலை அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழையமாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









