Designed by Iniyas LTD
இலங்கையில் நிரந்தரமான தளத்தை அமைக்க அமெரிக்கா தீர்மானிக்கவில்லை – அமெரிக்க தூதுவர் அலய்னா
அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் கண்டி அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான, ஒத்துழைப்பின் மூலம், பாதுகாப்புக்கான உறுதியான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதோடு இரு நாடுகளும் கூட்டாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக தாங்கள் உடன்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசுடன் கூட இது போன்ற உடன்பாடுகளை நாங்கள் செய்திருக்கிறோம். எனினும், இலங்கையில் நிரந்தரமான தளத்தை அமைக்க தாங்கள் தீர்மானிக்கவில்லை என்றும் , அச்துதொடர்பில் எவ்வித எந்த உடன்பாடும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் ,பிராந்தியப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கும் இருதரப்பு உறவுகள், அனுமதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.