தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் போர்க்குற்றம் குறித்து இருதரப்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் : அவுஸ்திரேலியா

australian-flag-wallpaper-1920x1080இலங்கையில் போர் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.

போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சகலவிதமான சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதனை அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஊக்குவிக்கும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் இரண்டு தரப்புக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆயுதப் படையினருக்கு சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பில் கற்றுக் கொடுக்கும் கருத்தரங்கின் பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போர் இடம்பெறும் போதான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் குறித்து போதியளவு தெளிவிருக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.போர் வழிமுறைகள் எவ்வாறான மாற்றமடைந்தாலும் மனிதாபிமான சட்டங்களை பாதுகாக்க மதிக்க வேண்டியதன் அவசியத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் ஆக்கபூர்வமான பங்களிப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...