Designed by Iniyas LTD
இலங்கையில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்கள்…
FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்களின் குழு இலங்கையில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் 15 குழுக்கள் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளுக்கு இந்த 9 வெளிநாட்டு விசாரணை நிறுவங்களும் தொழில்நுட்ப ரீதியாகவும் ஏனைய உதவிகளையும் வழங்குகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதோடு குறித்த குழுக்கள் , குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இலங்கை விசாரணையாளர்களுடன் வெளிநாட்டு விசாரணை நிறுவனங்களில் எப்.பி.ஐ., ஸ்கொட்லன்ட் யார்ட், அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் நியூஸிலாந்து ஆகியவற்றின் சிறப்பு விசாரணையாளர்கள் இணைந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்டர்போல் பொலிஸாருடன் இலங்கை மிக நெருக்கமாக செயற்படுவதாகவும், பயங்கரவாதிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த தகவல்களை பறிமாற இன்டர்போலுடன் இணைந்து 24 மணி நேர நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.