Designed by Iniyas LTD
வற்றாப்பளையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பெண் பக்தரது தூக்குக் காவடி…

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இம்முறை வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உடசவம் இடம்பெற்றது
குறிப்பாக கடந்த 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து மக்கள் ஒன்று கூடுவதற்கு அச்சப்படுகின்றார்கள் இந்நிலையிலே சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் வழமையாக வருகை தருகின்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு பலத்த இராணுவ பாதுகாப்பு மற்றும் போலீசார் முப்படைகளின் பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது
இதன்போது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது வெளியிடங்களில் இருந்து தூக்குக் காவடி ஆலய வளாகத்தில் வர முடியாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது இருப்பினும் அன்றைய தினம் வருகை தந்து தூக்கு காவடிகளை பாதுகாப்புத் தரப்பினர் அனுமதித்திருந்தனர் அந்த வகையிலேயே தொடர்ச்சியாக இரண்டு மூன்று வருடங்களாக தனது நேர்த்திக் கடன்களை செய்து வருகின்ற பெண் அடியவர் ஒருவர் இம்முறையும் தூக்குக் காவடி எடுத்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது
இதனை மக்கள் விசேடமாக உற்றுநோக்கிய தோடு இளைஞர்கள் முண்டியடித்துக்கொண்டு புகைப்படங்கள் எடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது