Designed by Iniyas LTD
இலங்கையில் விண்கற்கள் பொழிய வாய்ப்பு
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் விண்கற்கள் பொழிவு காணப்படவுள்ளதாக கோள் மண்டலம் (Planetarium) அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் இடைக்கிடை இவ்வாறான விண்கற்கள் பொழிவை காணமுடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் Draconid என்ற விண்கற்கள் பொழிவை இலங்கையர்கள் அவதானிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் 21ம் 22ம் திகதிகளில் Orionids விண்கற்கள் பொழிவை இலங்கையர்கள் அவதானிக்க முடியும். மேலும் நவம்பர் மாதம் 4, 5, 17, 18 ஆம் திகதிகளிலும், டிசம்பர் மாதம் 13, 14, 21, 22ஆம் திகதிகளிலும் இலங்கையில் அதிகளவான விண்கற்கள் பொழிவை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.