Designed by Iniyas LTD
யாழ். கொக்குவில் பிரம்படிப் பகுதியில் துப்பாக்கி சூடு
யாழ். கொக்குவில் பிரம்படிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நேற்றைதினம் அதிகாலையில் முச்சக்கர வண்டியில் வந்தோரால் கைத் துப்பாக்கிச் சூடு இடம் பெற்றுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொக்குவில் பகுதியில் உள்ள வீட்டில் நேற்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் வீட்டில் உள்ளவர்கள் உறக்க த்தில் இருந்த வேளையில் திடீரெனக் கேட்ட துப்பாக்கி சூட்டு சத்திதனை அடுத்து வீட்டார் எழுந்து பார்த்தபோது ஓர் ஓட்டோ செல்வதனை அவதானித்துள்ளனர். பின்னர் அவதானித்து பார்த்த போது வீட்டின் முன்னால் துப்பாக்கி ரவை காணப்பட்டதுடன் வீட்டின் சுவரில்துப்பாக்கிச் சன்னம் துளைத்த அடையாளமும் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனையடுத்து சம்பவ இடத்திற்திற்குச் சென்ற பொலிசார் துப்பாக்கி ரவையை மீட்டதோடு இது தொடர்பில் மேலதிக விசா ரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த துப்பாக்கிச் சூட்டுக்;கான காரணம் இதுவரையில் தெரிய வராதபோதிலும் இது ஓர் தனிப்பட்ட பகைமையின் காரணமாக இடம்பெற்றதா என்ற ஐயமும் நிலவிவருகிறது. இதேவேளை நீண்டகாலத்துக்கு பின்னர் இடம்பெற்ற இச் சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.