தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் 1 மணித்தியாலத்துக்கு ஒருவர் விபத்தால் உயிரிழப்பு

இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கு ஒருவர் பல்வேறு விபத்துக்களினால் உயிரிழந்து வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

வீதி விபத்து, தற்கொலை உட்பட அவசர விபத்துக்களினால் 15 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட இலங்கையர்கள் ஒருவருடத்துக்கு 10 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார மற்றும் உள்நாட்டு மருத்துவ விவகார அமைச்சின் தொற்றாத நேய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு விபத்துக்குள்ளாகும் இலங்கையர்கள் ஐவரில் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் தேசிய விபத்து தவிர்ப்பு மாதம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகனம் செலுத்துபவர்கள் ஆகியோரை தெளிவுபடுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு அறிவித்துள்ளது.

Comments
Loading...