தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் பல்வேறு ஐ.நா உறுப்பு நாடுகள்

UNIted-nation-human-rights-councilஇலங்கை இறுதிக்கட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பு நாடுகளின் கருத்துகள் கேட்கப்பட்டன.

 ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின், 30ஆவது கூட்டம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஒரு வார காலத்திற்கு முன்பு, இலங்கை இறுதிப்போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது.

 இதையடுத்து, அமெரிக்காவும் தனியாக, வரைவு தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை முறைப்படி ஜெனீவா கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான பொதுவிவாதம் நடைபெற்றது.

 அப்போது பேசிய இலங்கை பிரதிநிதி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தோடு இணைந்து செயல்பட்டு, நடவடிக்கையையும், விசாரணையையும் இலங்கை மேற்கொள்ளும் என்றார்.

 இக்கூட்டத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா, எஸ்தோனியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள், இலங்கையின் நிலைப்பாட்டிற்கும், அந்நாடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்தன.

Comments
Loading...