Designed by Iniyas LTD
இலங்கையில் உள்நாட்டு விசாரணையில் நீதி கிடைக்காது : மனித உரிமை ஆணையம் கருத்து
இலங்கை இறுதிக்கட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பு நாடுகளின் கருத்துகள் கேட்கப்பட்டன. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய சாரம்சங்கள் குறித்துப் பார்ப்போம்.
இலங்கை இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்த போர்க்குற்றத்திற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போரின்போது, படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதுடன், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களும், கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச போர்க்குற்றமாக கருதக்கூடிய அளவிற்கு மனித உரிமை மீறல் நடைபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்றிருப்பது சாதாரண கொலைகள் அல்ல என்றும், அவை சட்டவிரோத படுகொலைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, இதுகுறித்து பன்னாட்டு கலப்பு நீதிமன்ற பொறிமுறையை முன்னிறுத்தும், கலப்பு நீதிமன்ற விசாரணை நடத்துவதையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தாமாகவே நடத்தும் உள்நாட்டு விசாரணையால் எந்த பயனும், பலனும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.