தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை அரசு மரண தண்டனை விதித்ததை கண்டிக்கிறேன் – சீமான்

குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மேல்புறத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்று பேச கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை நாகர்கோவில் வந்தார். அவர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு உள்ள நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–SEEMAN

குமரி மாவட்ட விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றியவர் மார்ஷல் நேசமணி. அவருக்கு மலர் அஞ்சலி செலுத்த இன்று நாகர்கோவில் வந்தேன். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசு மரண தண்டனை விதித்ததை கண்டிக்கிறேன். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றனர்.

தற்போதைய ஆட்சியில் தமிழக மீனவர்கள் சட்டத்தின் மூலம் கொல்ல தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் போதைப் பொருள் எதுவும் கடத்த வில்லை என்று விசாரணை அதிகாரிகள் கூறிய பின்னரும், அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச அளவுக்கு பெருமை வாய்ந்த இந்தியாவை குட்டி நாடு மிரட்டி பார்க்கிறது. இதற்கு உரிய நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி தூய்மையான ஆட்சி மலர வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. இன்றளவும் அந்த கொள்கைக்காக உழைத்து வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமா? என்பது பற்றி 2015 மே மாதம் 18–ந்தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டில் முக்கிய முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...