தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை ஊடகவியலாளர்கள் தாயகம் செல்கின்றனர்!

media-freedom_CIயாழ்.ஊடக அமையத்தின் அழைப்பின் பேரில் இலங்கை ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் உட்பட தெற்கின் 90 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இன்று சனிக்கிழமை காலை கொழும்பிலிருந்து யாழ்தேவியில் தாயகத்தின் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கவுள்ளனர். மாலை 02.30 மணியளவில் யாழ்ப்பாணம் வந்தடையும் குழுவினர் வடக்கின் 50 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்று தினங்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்கின்றனர்.

மதத்தலைவர்களைச் சந்தித்தல், முதலமைச்சரைச் சந்தித்தல், ஆளுநரைச் சந்தித்தல், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக நினைவுத்தூபி அமைத்தல், காணாமல்போன மற்றும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு, பலாலியில் படை அதிகாரிகளுடனான சந்திப்பு, ஊடகச் செயலமர்வு, சான்றிதழ் வழங்குதல், கலாச்சார நிகழ்வுகள், கடன் அடிப்படையிலான மோட்டார்வாகனம் வழங்கல், பாதிக்கப்பட்ட ஊடககுடும்பங்கள் மூன்றிற்கு வீடு அமைக்கும் அடிக்கல் நாட்டல் வைபவம் நாகவிகாரை, நயினை நாகபூசனி அம்மன் ஆலய வழிபாடு உள்ளிட்ட நிகழ்வுளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந் நிகழ்வானது வடக்கு ஊடகவியலாளர்களும் தெற்கின் ஊடகவியலாளர்களும் சங்கமிக்கும் நல்லிணக்கச் சந்திப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments
Loading...