தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீள்குடியேறிய மக்களிடம் வீடுகள் கையளிப்பு!

senpakamதிருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம்,கஞ்சிகுடியாறு கிராமங்களில் மீள் குடியேறிய மக்களுக்கு புதிதாக அமைக்கப்பட்ட 201 வீடுகளில் 100 வீடுகள் இலங்கை  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால்  மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வு,   இன்று சனிக்கிழமை, திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில்  இடம்பெற்றது. இதன்போது, திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சரால் வீடுகளுக்கான  பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வீடுகள் தலா 2 இலட்சம் ரூபாய் செலவில் இலங்கை புனர்வாழ்வு அமைச்சினால் நிர்மானிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஸ்ரீ அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் கதிர்காம யாத்திரிகைகளுக்கான யாதிரியகள் தங்கிச் செல்லும் மண்டபத்துக்கான அடிகல் நட்டுவைத்ததுடன், மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  கிராமங்களுக்குச் சென்று மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார். 

Comments
Loading...