தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை ஜனாதிபதி சிறிசேன ரணில்விக்கிரமசிங்கவுடன் இரகசிய பேச்சுவார்த்தை!

ranil maithiri 88fஇலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நீண்ட நேரம் இரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்தப்பின் ஜனாதிபதியும் பிரதமரும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மைத்திரி மற்றும் ரணில் இருவரும் பல்வேறு திட்டங்கள் பற்றி ஆலோசனை செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக பாராளுமன்றத்தை கலைத்தல், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக தேர்தல் முறை மாற்றத்தைக் கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

வருகின்ற  ஜூன் மாதம் நடுப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அதற்கு முன்னதாகவே பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கோரிவருகின்றது.

ஆனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமாக தேர்தல் முறை மாற்றத்தைக்கொண்டு வந்த பின்னரே பாராளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்று வலியுறுத்திவருகின்றது.

இந்நிலையிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயம் குறித்து மிக நீண்டநேரம் ஆராய்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Comments
Loading...