தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிங்கள குடியேற்றத்திற்கு முன்னுரிமை வழங்கும் வடக்கு ஆளுனர் பளிஹக்கார

Palihakkara _3சிங்கள மக்களின் குடியேற்றத்துக்கு வடமாகாணத்தில் முன்னுரிமை வழங்கும் செயற்பாடுகளை அம்மாகாண ஆளுனர் பளிஹக்கார  மேற்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு உதவிகளை வழங்க அவர் அரசாங்க அதிபருக்கு பணித்திருந்தார். தற்போது தமிழ் மக்களின் குடியேற்றத்தை காட்டிலும் சிங்களவர்களின் குடியேற்றத்தை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆளுனர் பளிஹக்கார  ஈடுபட்டுள்ளதாக அறியப்படுகிறது.

மேலும் அவர் குறிப்பாக வடக்கில் சிங்களவர்கள் வசித்ததாக கூறப்படும் பிரதேசங்களை அடையாளம் கண்டு அவற்றில் சிங்கள மக்களை குடியேற்றும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

புதிய ஆளுனரான இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாகவே  நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...