தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம்

இலங்கை அரசாங்கம் நிறைவேற்றாத விடயங்கள் தொடர்பில் இனிமேலும் காலம் தாழ்த்தாமல், சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஜெனிவாவில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மாநாடு, நாளை மறுதினம் ஆரம்பமாகி எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஜெனிவிவாவில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளைய தினம் அமெரிக்காவுக்கு பயணித்து, அங்கிருந்து ஜெனிவா செல்லவுள்ளதாக சிவாஜிலிங்கம் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.


Comments
Loading...