தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிவாஜிலிங்கம் மீதும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு…

தமிழீழ தேசியத் தலைவர்   வே.பிரபாகரன் அவர்களின்  பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நவம்பா் மாதம் 26ம் திகதி  தமிழீழ தேசியத் தலைவரின்    பிறந்த நாளில் வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தில் கேக் வெட்டி கொண்டாடுவதற்கு சிவாஜிலிங்கம் முயற்சித்திருந்தாா்.

எனினும் அப்போது பொலிஸாா் அதனை தடுத்திருந்ததுடன், வழக்கு பதிவு செய்வோம் என பொலிஸாா் கூறியிருந்தனா்.

இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று 4 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

குறித்த அழைப்பாண நேற்று இரவு 9 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருந்த சிவாஜிலிங்கத்தை வழிமறித்த பொலிஸாா் வழங்கியுள்ளனா்.

மேலும் சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவா் கோ.கருணானந்தராசா, மற்றும் நகரசபை உறுப்பினா் பொ.சிவஞானசுந்தரம் ஆகியோருக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...