தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை நாடாளுமன்றம் வருகின்ற 3ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

sri-lanka-parliamenஇலங்கையில் இன்றைய  தினம் கூடிய புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வானது, சபை நடவடிக்கைகளை அடுத்து எதிர்வரும் 3ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணியளில் ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர், சபை முதல்வர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பின்னர் சபை நடவடிக்கை பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆரம்பமாகிய நாடாளுமன்ற அமர்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கொள்கைள் தொடர்பில் சிறப்புரையாற்றியதோடு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய தினம் அமைச்சரவை உறுப்பினர்கள் தொடர்பில் நாடாளுமன்றில் தீர்மானம் எடுக்க எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து அடுத்த நாடாளுமன்ற அமர்விலேயே அனுமதி பெற்றுக்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...