தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வித்தியா படுகொலை: சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகளை தனியார் நிறுவன சோதனைக்கு அனுப்ப உத்தரவு

vidyaபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஒன்பது நபர்களின் இரத்தமாதிரிகளை தனியார் இராசாயன பகுப்பாய்வு நிறுவனத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார். மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த மே மாதம் 14 ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியாவி கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட 9 நபர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்கள். வழக்கில் தொடர்புடைய 9 நபர்களின் இரத்த மாதிரிகளை பெற்று, மரபணு பரிசோதனைக்குட்படுத்துமாறு கடந்த வழக்கில், ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன் பிரகாரம், 9 நபர்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு அது குறித்தான அறிக்கையினை சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தார். ஆனால் இரத்த மாதிரிகளை தனியார் இரசாயன பகுப்பாய்வு நிறுவனத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டதுடன், 9 நபர்களையும் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த 9 நபர்களில் மூவர் சார்பில் சிங்கள இனத்தினைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரும், வழக்குதொடுநர் சார்பில் ஒரு சட்டத்தரணியும் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...