Designed by Iniyas LTD
இஸ்லாமிய நாடு என்ற எழுத்து இடம்பெறவேண்டும் – ஐஎஸ்ஐஎஸ்
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்களுக்கு இனி கணிதம், விளையாட்டு மற்றும் சமூக கல்வி ஆகியவைகளை நடத்தக்கூடாது என ஐ.எஸ். தீவிரவாதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விளையாட்டையும் தடை செய்துள்ள தீவிரவாதிகள், தேர்தல் மற்றும் ஜனநாயகம் பற்றி தெரிந்துகொள்ள சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர். மாறாக தீவிர இஸ்லாமிய குழுக்கள் குறித்து சிறுவர்கள் கற்பிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த உத்தரவை மீறும் ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இனி பாடப்புத்தகங்களில் உள்ள சிரிய அரபு குடியரசு நாடு என்ற எழுத்துக்களுக்கு பதிலாக இஸ்லாமிய நாடு என்ற எழுத்து இடம்பெறவேண்டும் என்றும் தீவிரவாதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆசிரியர்கள் தேசியம் குறித்தும் இனம் தொடர்பான பாடங்களையும் நடத்துவதற்கு பதிலாக இஸ்லாம் பற்றி மட்டும் போதிக்கவேண்டும் என்றும் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.