தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போகோஹாரம் தீவிரவாதிகள் மீது நைஜிரிய படையினர் தீவிர தாக்குதல்

நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் மீது நைஜிரிய படையினர் தீவிர தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளனர்.Nigeria

அதன்படி அந்நாட்டின் வடகிழக்கு நகரமான மெயிடுகுரியில் தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் நடத்திய தீவிர தாக்குதலில் பலர் பலியானார்கள். இத்தாக்குதலில் தீவிரவாதிகளின் வாகன்ங்கள், விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த தீவிரவாதிகள் மெய்டுகுரியில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள கோண்டுகா நகரை நோக்கி தப்பி ஒடினர்.

அவர்களை ராணுவம் பின் தொடர்ந்து வருவதாக பிரிகேடியர் ஜெனரல் ஒலாஜிடே ஒலாலியே தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட தாக்குதலில்களில் தீவிரவாதிகள் இம்முறை பலத்த இழப்பை சந்தித்துள்ளளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. கோண்டுகா அருகே உள்ள காவுரி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களில் ஒருவர் தீவிரவாதிகள் பலத்த இழப்பை சந்தித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Comments
Loading...