Designed by Iniyas LTD
இ. போ. சபை பஸ் வண்டியில் போலி குண்டை வைத்துச் சென்ற சந்தேகநபர்..
இ. போ. சபை பஸ் வண்டியில் போலி குண்டை வைத்துச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலன்தொட – கொக்கல மகா வித்தியாலயத்தை அண்மித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இராணுவத்திலிருந்து விலகிய ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ் வண்டியின் பின்புற ஆசனத்தில் குறித்த நபர் விட்டுச் சென்ற பொதியை வெளியில் கொண்டுவந்து சோதித்த போது, இலத்திரனியல் உபகரணம், மோட்டார் சைக்கிளுக்கான மின்கலம் ஆகியவற்றை இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு கண்டுபிடித்தது.
இதைனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து மே மாதம் 9 ஆம் திகதி வரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.