தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில் வெடிபொருட்களுடன் மூவர் கைது..

கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில் ஒரு கிலோ கிராம் வெடிபொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவரைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

முச்சக்கர வண்டியொன்றில் சி-4 வகை வெடிபொருட்களை குறித்த மூவரும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் முச்சக்கர வண்டியில் நடாத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் முச்சக்கர வண்டியையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Comments
Loading...