தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இ.போ.சவின் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து கட்டணமும் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது. தனியார் பேருந்து கட்டணத்திற்கு இணையாக நூற்றுக்கு 6 வீதமாக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.sltp

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை பிரதி அமைச்சர் அஷோக அபயசிங்க இதனை தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் சீரமைப்பு திட்டத்தின் கீழ் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி குறைந்த பேருந்து கட்டணமாக 9 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...