Designed by Iniyas LTD
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மைத்திரி அவசர சந்திப்பு
சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும், இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
இதற்காக அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இரவு 7 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக, சுதந்திரகட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்துள்ளார். இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.