தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்தினர் தாக்குதல்- வவுனியாவில் சம்பவம்

வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இ.போ.ச நடத்துனர் மீது , தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் காயமடைந்த  இ.போ.ச நடத்துனரான   31 வயதுடைய தா.விக்கினேஸ்  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தினை எட்டாம் கட்டை பகுதியில் வவுனியாவிலிருந்து வாரிக்குட்டியூர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தினர் வழிமறித்துள்ளனர்.

தனியார் பேருந்து  நேரத்தில்இ.போ.ச  செல்வதாக தெரிவித்து ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் போதெ  இ.போ.ச நடத்துனர் மீது இந்த  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பூவரசங்குளம் பொலிஸார் குறித்த தனியார் பேருந்தின் நடத்துனர், சாரதியினை கைது செய்துள்ளனர்.

மேலும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும்  வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

Comments
Loading...