Designed by Iniyas LTD
நாட்டிற்கு தமிழ் மொழி தெரிந்தவரே ஜனாதிபதியாக வரவேண்டும்- குமார் வெல்கம
சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பேசும் தமிழ் மொழி தொடர்பில் தௌிவு பெற்ற ஒருவரே ஶ்ரீலங்கா ஜனாதிபதியாக வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது நாட்டில் காணப்படுகின்ற சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலே நடைபெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குமார வெல்கம கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.