Designed by Iniyas LTD
ஈராக்கில் இராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து
ஈராக்கில் ராணுவ விமானம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். முதலில் விமானம் இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தாங்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் கூறியுள்ளனர். உளவு பார்க்கும் விமானமானது உளவு பார்க்கும் பணிக்காக சென்ற போது தலைநகர் பாக்தாத்தில் இருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிர்குக் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விமானம் கீழே விழுந்ததில் 3 பேர் குழுவினர் காணவில்லை என்று முதலில் கருதப்பட்டது. நிலையில் இந்த விமான விபத்து சம்பத்திற்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ் தீவிராவாதிகள் பொறுப்பேற்றுள்ளனனர். இது குறித்த தகவலை தனது டுவிட்டர் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.