Designed by Iniyas LTD
ஈரானில் நான்கு வருடங்களுக்கு பிறகு பிரிட்டன் தூதரகம் திறப்பு!
ஈரானில் பிரிட்டன் தூதரகம் நான்கு வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. டெஹ்ரானில் நடந்த திறப்பு விழாவில் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப் ஹேமண்ட் கலந்து கொண்டார்.
கடந்த 2011ஆம் ஆண்டு அணுசக்தி விவகாரம் தொடர்பாக ஈரான் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடைகளை விதித்ததை அடுத்து டெஹ்ரானில் இருந்த அந்நாட்டின் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூடப்பட்ட தூதரகம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் திறப்பு விழாவின் போது பேசிய பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹேமண்ட், ஈரானில் அதிபராக ஹசன் ரோஹானி தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அந்நாட்டுடனான உறவில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், கடந்த மாதத்தில் ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருநாட்டின் உறவினை மேலும் மேம்படுத்தும் வகையில் தூதரகத்தை திறக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஞாயிறன்று நடந்த ஈரான் தூதரக திறப்பு விழாவில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா, ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் மெஹ்தி டேனேஷ் யாசிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.