Designed by Iniyas LTD
ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து தமிழர்களும் கொண்டாடுகின்ற ஒரு பண்டிகை ஆடிப்பிறப்பு .
ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து தமிழர்களும் கொண்டாடுகின்ற ஒரு பண்டிகை. உறவுகளிடம் அன்பையும் பாசத்தையும் வளர்க்கின்றவை பண்டிகைகள் என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அந்தவகையில் ஆடிப்பிறப்பும் கூட மிகவும் விக்ஷேசமானதுதான்.
இன்றைய இந்த ஆடிப்பிறப்பு நன்னாளை ஈழப்புலவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் அருமையாக ஒரு பாடலொன்றை நமக்காக இயற்றியுள்ளார்.
“ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்… கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் …கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!”
என அவர் பாடியுள்ளார்.
இந்தப் பாடலில் நவாலியூர் சோமசுந்தரப் பிள்ளை “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே…” என்று பாடுகிறார்.
அடுத்தவரியாக அவர் கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்…கொழுக்கட்டை தின்னலாம்…என்று பாடுகின்றார். எங்களுடைய உணவு வெறும் உணவு மாத்திரமல்ல. அதனுடன் இணைந்த வகையில் தமிழுணர்வினையும் ஊட்டுகின்றது என்பதை குறிப்பிட்டு அவர் சொல்லியிருக்கின்றார்.
அதோடு இந்த வரிகளின் ஊடாக உறவினர்களுடன், அயலவர்களுடன் அன்போடு நாம் இருக்கவேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்
பனங்கட்டிக் கூழ், கொழுக்கட்டை, மோதகம் போன்ற உணவுகள் தமிழர்களின் கலாசார உணவுகள்
இன்றைய ஆடிப்பிறப்பு நன்னாளை தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் பிள்ளை கூறியது போன்று நாங்களனைவரும் இணைந்து ஆன்ந்தமாகக் கொண்டாடுவோம்.
முழுப் போசணையுள்ள உணவு வகைகளான கூழ், கொழுக்கட்டை,மோதகம் என்பன அவித்து எங்கள் மரபு காப்போம்.
