தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உடுமலையில் சாதிவெறியில் கௌரவக் கொலை: தந்தை நீதிமனறத்தில் சரண்!

mur 1உடுமலைப்பேட்டையில் நேற்று நடத்த சாதி வெறி கௌரவக் கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை நீதிமனறத்தில் சரணடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சங்கர் (22). இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகள் கௌசல்யா (19). இவர், குமரலிங்கத்தில் உள்ள டைல்ஸ் விற்பனைக் கடையில் பணியாற்றி வந்தபோது, கெளசல்யாவும், சங்கரும் காதலித்தனராம்.

இவர்கள், காதலுக்கு கௌசல்யா வீட்டில் எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்ப்பையும் மீறி, கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இந்த இளம் தம்பதி ஞாயிற்றுக்கிழமை உடுமலைக்கு வந்தனர். இங்கு, மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் பொருள்களைக் வாங்கிக் கொண்டு பிற்பகல் 3 மணியளவில் அப்பகுதியில் இத்தம்பதி நடந்து சென்றனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், இத்தம்பதியை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், சங்கர் மற்றும் கௌசல்யா இருவரும் படுகாயம் அடைந்தனர். பட்டப்பகலில், நடந்த இச்சம்பவத்தைப் பார்த்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த ஆணவக் கொலையில் தொடர்புடைய கவுசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நீதிமனறத்தில் ஆஜராகியுள்ளார். தம்பதிகளை அரிவாளால் வெட்டிய கும்பல் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...