Designed by Iniyas LTD
உடையார்கட்டில் விபத்து – பாடசாலை மாணவன் படுகாயம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உடையார்கட்டு பாடசாலைக்கு முன்பாக இன்று(24) 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவ சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உடையார்கட்டு பாடசாலைக்கு முன்பாக பாடசாலை விட்டு வீடு சென்ற மாணவனை வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் மோதித்தள்ளியத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
இதன்போது உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்விபயிலும் பதினோரு வயதுடைய உடையார்கட்டு தெற்கு பகுதியை சேர்ந்த மாதவன் என்ற சிறுவன் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்
சம்பவ இடத்துக்கு வந்த புதுக்குடியிருப்பு பொலிசார் மோட்டார் சைக்கிள் சாரதியை கைது செய்துள்ளதோடு விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

