Designed by Iniyas LTD
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்..
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் குறித்த கடிதத்தை, ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் நேற்றையதினம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளான, சுலக்சன், திருவருள், தபரூபன்,சிவசீலன், ஜெயச்சந்திரன், ஜெகன், நிர்மலன், தில்லைராஜ் உள்ளிட்ட 10 அரசியல் கைதிகளையும் சந்தித்துள்ளனர்.
இதன்போதே, ஜனாதிபதிக்கான கடிதம், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சேனக பெரேராவிடம் கையளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அரசியல்வாதிகள் தம்மை ஏமாற்றி வருவதாகவும், அதனால் அரசியல் வாக்குறுதிகளில் நம்பிக்கையிழந்து போயிருப்பதாகவும் கைதிகள் தம்மிடம் தெரிவித்ததாக சேனக பெரேரா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.