Designed by Iniyas LTD
மன்னாரில் 181 கிலோ கிராம் கஞ்சா சான்றுப் பொருள்கள் அழிப்பு..
மன்னார் மேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் 181 கிலோ கிராம் கஞ்சா சான்றுப் பொருள்கள் இன்று தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான 7 வழக்குகளின் சான்றுப் பொருள்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய உத்தரவில், நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள அரச காணியில் அவை எரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஒரு கோடியே 81 இலட்சம் ரூபா பெறுமதியான 181 கிலோ 625 கிராம் எடைகொண்ட கஞ்சா போதைப்பொருள்களே இவ்வாறு தீயிட்டு அழப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.