தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உதகை அருகே அரிய வகை பூக்கள்

உதகை அருகே அரிய வகை ஆர்கிட் தாவரங்களில் பூத்துள்ள மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோலை காடுகளில் அரிய வகையான ஆர்கிட் தாவரங்கள் அதிக அளவில் உள்ளன.oot

அழிந்து வரும் பட்டியலில் உள்ள இந்த தாவரங்களையும், அதன் பூக்களையும் பார்ப்பது அரிதான ஒன்று.   உதகை அருகே உள்ள கேர்னில் வனப்பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டு ஆர்கிட் வகை தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அங்கு பூத்துள்ள மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.   எரிடீஸ் ரிங்கன்ஸ் வகை மலர்கள் ஆண்டிற்கு இரண்டு முறை மட்டுமே பூக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...