தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எதிரிகளை வீழ்த்த பாம்பு இரத்தம் குடித்து வரும் அலெக்சாண்டர் ஹோர்வத்

அமெச்சூர் குத்துச்சண்டை போட்டியில் விஜேந்தர் சிங்கை வீழ்த்த பாம்பு ரத்தம் அருந்துவதாக அவருடன் மோத இருக்கும் ஹங்கேரிய வீரர் தெரிவித்துள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.  தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு தாவியுள்ள இந்திய நட்சத்திர வீரர் விஜேந்தர் சிங், தொடர்ச்சியாக தான் மோதிய 3 போட்டிகளிலும் நாக் அவுட் மூலம் வெற்றி பெற்று உலக அரங்கில் முத்திரை பதித்துள்ளார்.  அடுத்ததாக, விஜேந்தர் வரும் 12ந்தேதி தனது 4வது போட்டியில், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 20 வயது, அலெக்சாண்டர் ஹோர்வத் ( Alexander Horvath) என்ற வீரருடன் மோத இருக்கிறார். இவரும் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளவரே.  vijender_singh_0

நாகத்தின் ரத்தம்:  

இந்நிலையில், விஜேந்தருடன் மோத இருக்கும் போட்டிக்காக தன்னை வித்தியாசமான முறையில் தயார்படுத்தி வருவதாக கூறியுள்ள அலெக்சாண்டர்,  அதற்காக நாகப்பாம்பின் ரத்தத்தை அருந்துவதாகவும், அதன் மூலம் தனக்கு அதிபயங்கரமான சக்தியை பெற்று வலிமை பெருவதாகவும் கூறி மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அலெக்சாண்டர் தெரிவித்ததாவது, பாம்பு ரத்தததை தனது அன்றாட உணவில் ஒரு அங்கமாக அருந்தி வருவதாகவும், இது தங்கள் பரம்பரை வம்சாவழியாக வந்த பாரம்பரியம் என்றும் இதன் மூலம் எதிராளியை பலமாக தாக்கமுடிவதாகவும் கூறினார்.

அமெரிக்காவின் மெரைன்ஸ்:  

இவர் மட்டுமே பாம்பு ரத்தம் குடிப்பதாக எண்ணிவிடாதீர்கள், உலகின் மிக வலிமையான ராணுவப்படையான அமெரிக்காவின் மெரைன்ஸ் பிரிவைச்சார்ந்த வீரர்களும் தங்களது பயிற்சியின் போது இதை செய்கிறார்கள்.

விஜேந்தரின் அடுத்த சவால்:  

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடக்க இருக்கும் போட்டியில் விஜேந்தரை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும், இந்தியாவின் பிரபலராக இருந்தாலும் தன்னிடம் அவரின் சவால் எடுபடாது என்றும், விஜேந்தரை வீழ்த்தி அவருக்கு பாடம் புகட்ட காத்திருப்பதாகவும் கர்ஜிக்கிறார் அலெக்சாண்டர்.  முன்னதாக, விஜேந்தருக்கு நானே அச்சுறுத்தலான வீரர் என்று கூறிய பல்கேரிய வீரரை, போட்டி தொடங்கிய 2-ஆவது சுற்றிலேயே நாக்-அவுட் முறையில் அடித்து நொறுக்கினார் என்பது நினைவிருக்கலாம்.  அதைப்போல சவால் விடும், அலெக்சாண்டரையும், விஜேந்தர் வீழ்த்தி பதிலடி கொடுப்பாரா என்பதை வரும் சனிக்கிழமை வரை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Comments
Loading...