தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உயிரிழந்த பிரித்தானிய தமிழரின் சடலம் சிறீலங்காவில் தகனம்.

images (7)

நேற்று முன்தினம் மர்மமான முறையில் சிறீலங்கா மகஸின் சிறைச்சாலையில் உயிரிழந்த பிரித்தானிய தமிழ் அரசியல் கைதியை சிறீலங்காவிலேயே தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அவரது மனைவி, பிள்ளைகள் அடங்கலாக உறவினர்கள் அனைவரும் பிரித்தானியாவில் உள்ள நிலையில் அவரது சடலத்தை பிரித்தானியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

எனினும் அவரது சடலம் பிரித்தானியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டால்  அவர் இறந்தமைக்கான உண்மையான காரணங்கள் வெளியாகிவிடும் என்ற நிலையில்இ அவரை உள்நாட்டிலேயே தகனம் செய்வதற்கு மகஸின் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்

பிரித்தானிய பிரஜையான விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்பவர் மர்மமான முறையில் நேற்று முன்தினம் சிறைச்சாலையின் மலசலகூடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். எனினும் அவர் மாரடைப்பின் காரணமாகவே உயிரிழந்ததாக சிறைச்சாலையின் வைத்திய அதிகாரிகள் தொடர்ந்தும் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பலதரப்பினராலும் கேள்விகள் எழுப்பப்படும் நிலையில் தகன நடவடிக்கைகள் மும்மரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...