தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகின் கடைசி பெண் ஆமை..

சீனாவில் மெல்லிய ஓடு கொண்ட அரியவகை ஆமையினத்தின் கடைசி பெண் ஆமையும் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த இனம் முற்றிலும் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

யாங்ட்ஷி ((Yangtze)) ஆமைகள் என வர்ணிக்கப்படும் மெல்லிய ஓடு கொண்ட ஆமைகள் சீனாவில் மட்டுமே இருந்து வந்தன.

தொடர்புடைய பதிவு

இந்நிலையில் வரைமுறையற்ற வேட்டை, நீர் மாசுபாடு போன்ற காரணங்களால் இந்த ஆமைகள் அழிவைச் சந்தித்தன.

குறித்த ஆமை இனத்தின் கடைசி 4 ஆமைகள் ஷூஷோ ((Suzhou zoo)) விலங்கியல் பூங்காவில் ஆமையும் பாதுகாக்கப்பட்டு வந்தன.

பாதுகாப்பட்ட நான்கு ஆமைகளில் 90 வயதான பெண் ஆமை வயது மூப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்தது.

இதன் காரணமாக இனப்பெருக்கம் அடைய முடியாமல் யாங்ட்ஷி ஆமை இனம் அழிவின் விளிம்பில் உள்ளது .

Comments
Loading...