தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் மூழ்கிய கப்பலில் இருந்து பொருட்கள் மீட்பு..

ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் மூழ்கிய கப்பலில் இருந்து சிதைந்த பொருட்கள் கிரீஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

5ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தக் கப்பல் சரக்குக் கப்பலாக பயன்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

குறித்த கப்பலில் இருந்து ஏராளமான பூச்சாடிகள், கோப்பைகள் மற்றும் குவளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது..

பண்டைய ரோமானிய சாம்ராஜ்யத்தில் கட்டமைக்கப்பட்டதாக நம்பப்படும் குறித்த கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் சுமார் 70 டன் வரை எடை இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகமாக மாற்றுவது குறித்து கிரீஸ் அரசாங்கம் பரிசீலித்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...