Designed by Iniyas LTD
உலகில் தமிழினம் தலை நிமிர்விற்காக 32வது நாளாக ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்! (காணொளி)
29.01.2014 அன்று நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைப்பயணமானது 02.03.2014 இன்று 32வது நாளாக வெற்றிக்கரமாக 25km தூரத்தை கடந்து சுவிஸ் நாட்டின் Lyss நகரத்தை வந்தடைந்தது.

மனிதநேயப் பணியாளர்களுக்கு தமது ஆதரவை அளிக்கும் வகையில் தமிழுறவுகளும் நடைப்பயணத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மனிதநேயப்பணியாளர்களும் தமிழகத்தில் இருந்து வருகை தந்த தமிழின உணர்வாளரான இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களும் இணைந்து மக்கள் சந்திப்பிலும் கலந்துக் கொண்டார்கள்.
மனிதநேயப் பணியாளர்கள் உறுதி தளராமல் தாய்மண்ணை மனதில் நிறுத்தி நடைப்பயணத்தைத் தொடர்கின்றனர்.
நடந்து செல்லும் பாதையில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நான்கு மொழிகளில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு வருகின்றது.
“விடியும் விடியும் விரைவில் விடியும்
விலங்கும் சிறையும் விரைவில் உடையும்
முடியும் முடியும் பகையும் முடியும்
முழுதாய் தமிழர் துயரம் முடியும்
தலைவர் காட்டிய வழியில் சென்று
தமிழீழம் அமைப்போம் உறுதி”
என்ற நடைபயண வீரர்களின் கோசத்துடன் இன்றைய நடைபயணம் நிறைவடைந்தது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=gUJugZ8rtmw” width=”560″ height=”315″]
மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும்.